நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள்
2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையின் 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட சர்வதேச சுகாதார திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ இதழ் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
சுகாதார உட்கட்டமைப்பு
இதன் காரணமாக, அரசாங்கத்திற்கும், வரி செலுத்துவோருக்கும் 41.5 மில்லியன் டொலர் நிதி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் வெளியேற்றமானது, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுகாதார உட்கட்டமைப்பை சீர்குலைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முக்கியமான சிறப்புப் பிரிவுகளில் வெற்றிடங்களுக்கு வழிவகுத்துள்ளது.
அத்துடன் மருத்துவக் கல்வியை சீர்குலைத்தது என்றும் குறித்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam