அநுரவின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட முக்கிய சம்பவங்கள்! அம்பலப்படுத்தும் எம்.பி
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலத்திற்குள்ளாக திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு அவர் நியமித்த பெருமளவானோர் பதவி விலகல் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டே அவர் மேற்குறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதிருப்தி
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருட காலத்திற்குள் அவரால் நியமிக்கப்பட்ட நிறுவன தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் 23 பேர் பதவி விலகியுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் இந்த அரசின் செயற்பாடுகள் மீதான அதிருப்தியை இது காட்டுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி கொண்டே அவர்களை ஆதரித்தவர்கள் பிரிந்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




