மட்டக்களப்பில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மீட்பு
மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பந்தனாவெளி சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த மீட்பு நடவடிக்கை இன்றைய தினம் (05.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெடுகுண்டுகள் மீட்பு
வயலில் வேலை செய்துக்கொண்ருந்தவர் ஒருவர், வயலை சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காக குழி தோண்டிய போது, கைக்குண்டுகள் தென்படுவதினை அவதானித்து வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற அனுமதியை பெற்ற விசேட அதிரடிப்படையினர், இன்று கொட்டும் மழையில் தோண்டு பணியை முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை மாவட்ட விசேட அதிரடிப் படை உதவி அத்தியட்சகர் ஏ.எம்.ஜி. சுஜிவ அத்தனாயக்க தலைமையில், வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டார, அம்பந்தனாவெளி கிராம சேவகர் சீ.கஜேந்திரன், வாகரை பிரதேச விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி அமில சிந்தக்க பிரேமரத்ன ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் தோண்டு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பொலித்தீன் பைகளில் பொதி செய்து நுட்பமான முறையில் ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்த 38 ஆர்பிஜி குண்டுகள்,38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதி கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம் அமைந்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam