புலம்பெயர் ரேவதன் - சின்னப்பா உட்பட 222 நபர்கள் மீது அநுர அரசின் அதிரடி நடவடிக்கைக்கு காரணம்!
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து 222 தனிநபர்களின் பெயர் விபரங்களையும் உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அநுர அரசு எடுத்துள்ள இத்தீர்மானத்தின் பின்னணி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள அதேவேளை இது தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் பாதிப்பாக அமையுமோ என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் முந்தைய அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் எவ்வித வித்தியாசங்களும் இல்லை.
15 அமைப்புகள் மற்றும் 222 தனிநபர்களுக்கும் தடை தடை விதித்து தேடுதல் அறிக்கையை இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை காணவோ தமிழ் மக்களுக்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை காட்டவோ இந்த அரசாங்கம் தயாரில்லை” என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,

சஞ்சீவ இருந்த அறைக்கு முகத்தை மூடி வந்த நபர்: அடுத்தடுத்து துப்பாக்கிச்சூட்டு சத்தம் - வழங்கப்பட்டுள்ள சாட்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
