பொஸ்பேட் நிறுவனத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர்: மோசடி விவகாரம் தொடர்பில் பரபரப்பு
கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, எப்பாவலவில் அமைந்துள்ள இலங்கை அரச பொஸ்பேட் நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக சென்றிருந்த நிலையில், அந்த நிறுவனத்தின் மோசடி மற்றும் ஊழல்களை அம்பலப்படுத்த ஊழியர்கள் குழுவொன்று முயற்சித்ததால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டடுள்ளது.
இதன்போது அமைச்சர் முன்னிலையில் நேற்று (17.07.2023) மோசடியுடன் தொடர்புடைய நிர்வாக அதிகாரி ஒருவரை அதன் ஊழியர் ஒருவர் தாக்க முயன்ற முயற்சி பொலிஸாரின் தலையீட்டினால் முறியடிக்கப்பட்டது.
நிறுவனத்திற்கு தேவையில்லாத அரைக்கும் இயந்திரத்தின் உதிரிபாகத்தை (கியர் பாக்ஸ்) இறக்குமதி செய்ததன் மூலம் நிறுவனத்திற்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டிய போதே பரபரப்பான சூழல் ஏற்பட்டடுள்ளது.
பரபரப்பான சூழல்
இது தொடர்பான உதிரிபாகங்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதால் அதனை மாற்றுவதற்கு எவ்வித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் தலைவர் சந்தியா அம்பன்வல, குறித்த சீன நிறுவனத்திற்கு முழுத் தொகையும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கோரிக்கை விடுத்த போதிலும் உதிரிபாகங்கங்களை மீளப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியிடை நீக்கம் செய்யுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |