நாமல் ராஜபக்சவுக்கு தனது குடும்ப பராமரிப்புக்கு கூட பணமில்லையாம்..! சந்தேகத்தை ஏற்படுத்துகிறது மாமனாரின் கருத்து
நாமல் ராஜபக்ச மற்றும் லிமினி ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுடன் கொழும்பு நெக்ரிஸ் வீதியில் அமைந்துள்ள எனது இரு மாடி வீட்டில் மேல்மாடியிலே வசித்து வருவதாக பிரபல தொழிலதிபரும், எல்.எஸ்.ஆர் (LSR) குழுமத்தின் தலைவரும்,லிமினியின் தந்தையுமான திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாமலின் குடும்பத்தின் அனைத்து பராமரிப்புச் செலவுகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து அன்றாடச் செலவுகளையும் தனது சொந்தப் பணத்திலிருந்தே செலவிடுவதாகவும் நாமலின் பணம் எதுவும் பெற்றுக் கொள்வதில்லை என்ற தொனியிலே குறிப்பிடுகிறார்.
ராஜபக்ச குடும்பத்துடனான உறவு
வலையொளித்தளம் ஒன்றிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
வீட்டிற்குள் எந்தவொரு அரசியல் கலந்துரையாடலோ அல்லது பிரசார நடவடிக்கைகளோ நடைபெறுவதில்லை.
நாமல் ராஜபக்ச வீட்டிற்கு வந்ததும் மிகவும் எளிமையான குடும்ப வாழ்க்கையையே வாழ்கிறார் என்றும் தெரிவிக்கிறார்.
ராஜபக்ச குடும்பத்துடனான ஏற்படுத்திக் கொண்ட உறவின் காரணமாக தனக்கும் தனது தொழில்களுக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதிலும், 2015ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்பத்தினர் அதிகாரத்தில் இல்லாத காலத்தில் நடைபெற்ற இந்தத் திருமணம் பிள்ளைகளின் விருப்பத்தின் பேரில் நடந்ததொன்று என்பதால், அது குறித்து தான் ஒருபோதும் வருந்தவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

ராஜபக்சக்களை மக்கள் திருடர்கள் என்று சொல்கிறார்கள். லிமினியின் தந்தையும் ஒரு திருடன். அப்படியானால் லிமினிக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது என பல கதைகள் கூறப்பட்டாலும் நான் அவ்வாறான எந்த சம்பவத்திற்கு சம்பந்தமில்லை.
நான் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கியது தான் எனது வியாபாரமாகும். திருமணம் என்பதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. அதற்கு முடிவெடுக்க வேண்டும். இரண்டு குடும்பங்களும் இணைந்து எடுக்கும் முடிவு அது.
அங்கு அரசியல் ரீதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அது ஒரு குடும்ப முடிவு,
மேலும் நாமலை எனக்கு இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். அவர் அசைவம் சாப்பிடாத, மது அருந்தாத ஒரு நல்ல பிள்ளை என குறிப்பிட்டுள்ளார்.
you may like this video