கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்பனை செய்யும் லங்கா சதோச

Sivaa Mayuri
in பொருளாதாரம்Report this article
வர்த்தக அமைச்சரினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசி மற்றும் தேங்காய் விற்பனையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை லங்கா சதொச அறிவித்துள்ளது.
அரிசி ஆலைகள் நாளாந்தம் 200,000 கிலோ அரிசியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோ அரிசியை 220 ரூபாய்க்கும், தேங்காய் ஒன்று 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
வாடிக்கையாளருக்கான அறிவிப்பு
இதன் அடிப்படையில், அரிசி மற்றும் தேங்காய்களை சதொச விற்பனை நிலையங்களுக்கு இன்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச தலைவர் சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஒரு வாடிக்கையாளருக்கு 03 தேங்காய் மற்றும் 05 கிலோ அரிசியை மாத்திரமே கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாலை முதல் கொழும்பில் உள்ள சதொச விற்பனை நிலையங்களிலும், நாளை 6 ஆம் திகதி முதல் புறநகர் பகுதிகளிலும் அரிசி மற்றும் தேங்காய்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 8 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
