சதொசவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
மேலும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
நான்கு வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.
சம்பா அரிசி, கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
புதிய விலை விபரம்
இதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 222 ரூபாவாகும்.

ஒரு கிலோ கடலையின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 549 ரூபாவாகும்.
மேலும், ஒரு கிலோ பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.
அத்துடன், சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 269 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam