இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்படும் லங்கா ரைட் 2025
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்படும் 'லங்கா ரைட் 2025' சைக்கிள் ஓட்டப் போட்டி எதிர்வரும் டிசம்பர் 18 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
டிசம்பர் 18ஆம் திகதி லேக் ஹவுஸ் வளாகத்தில் தொடங்கி, பேலியகொடை பொலிஸ் நிலையம் வரை சென்று அங்கிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் இப்போட்டியின் முதல் நாளில் 106 கி.மீ. பயணித்து கன்னொருவயை வீரர்கள் அடைவார்கள்.
வெற்றியாளர்களுக்கு ரூ. 600,000 முதல்
இரண்டாம் நாள் கண்டியில் இருந்து அனுராதபுரம் வரையிலும், மூன்றாம் நாள் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கம் வரையிலும் சவாரி செய்து போட்டியாளர்கள் நிறைவு செய்வார்கள்.

வீரர்கள் 4 முதல் 6 வீரர்கள் கொண்ட அணியாகப் போட்டியில் நுழையலாம். விண்ணப்பிக்க இறுதித் திகதி டிசம்பர் 12 ஆகும். வெற்றியாளர்களுக்கு ரூ. 600,000 முதல் 25வது இடம் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், சிறந்த இளம் வீரர், சிறந்த மலை ஏறுபவர் மற்றும் சிறந்த அணி ஆகியோருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam