தேசிய கீதத்தின் முக்கிய பாடல் வரிகள் சிதைக்கப்பட்டன! பாடகி உமாரா தொடர்பில் விசாரணை குழு வெளியிட்டுள்ள விடயம்
நடைபெற்று முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரின்போது பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தை அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விதம் போன்று பாடவில்லை என விசாரணை குழு தெரிவித்துள்ளது.
போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மெல்லிசையின் அடிப்படையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என, அது தொடர்பில் விசாரணை செய்த குழு தெரிவித்துள்ளது.
உருவான சர்ச்சை
2023ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆரம்ப நிகழ்வின்போது பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தை தவறான முறையில் உச்சரித்து பாடியமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொதுநிர்வாக அமைச்சு குழுவொன்றை நியமித்திருந்தது.
தேசிய கீதத்தின் மெல்லிசை அரசியலமைப்பில் நடுத்தர தொனியில் பாடுவதாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உமாரா அந்த கீதத்தை அதிக சுருதியில் பாடியிருந்தார். தேசிய கீதத்தை அதிக சுருதியில் பாடும் போது கீதத்தின் முக்கிய பாடல் வரிகளும் சிதைக்கப்பட்டன என விசாரணை குழு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து விசாரணை குழு சட்டமா அதிபர் திணைக்களத்தை தொடர்புகொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிபுணர்குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நிகழ்வில் தேசிய கீதத்தை பயன்படுத்துவது தொடர்பில் கூடியவிரைவில் விதிமுறையை சேர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
