வெளிநாடொன்றில் குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.
அதிகரித்து வரும் மன அழுத்தம்
சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், சமூக ஊடகங்களும், செல்போன்களும் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைத் திருடுகின்றன.
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் சமூகத் தனிமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சமீபத்தில் அவுஸ்திரேலிய அரசு 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
