கலிபோர்னியாவை உலுக்கிய பயங்கர காட்டுத்தீ : அதிரடியாக கைதான இளைஞன்
கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக 29 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கலிஃபோர்னியா காட்டுத்தீ இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவை உலுக்கிய பயங்கரமான சம்பவங்களில் ஒன்றாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
தீ விபத்தை முதன் முதலில் தூண்டியவர்
இந்த காட்டுத்தீ சம்பவத்தில் பசிபிக் பாலிசேட்ஸின் பெரும்பாலான அண்டை பகுதி பேரழிவுக்கு உள்ளானது.

இந்த கோர தீ விபத்தானது அதிகார பூர்வமாக ஜனவரி 7ஆம் திகதி மிகப்பெரிய அளவில் பரவ தொடங்கியது.
அத்துடன் 6000இற்கும் அதிகமான வீடுகள் மற்றும் கட்டிடங்களை முற்றிலுமாக அழித்தது.
இந்நிலையில் இந்த தீ விபத்தை முதன் முதலில் தூண்டிவிட்ட 29 வயது ஜொனாத்தன் ரிண்டர்கனெக்ட் என்ற நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ChatGPTஇல்
புதுவருடத்தின் போது ஜொனாத்தன் தூண்டி விட்ட இந்த காட்டுத்தீ ஒரு வாரத்தில் பிரம்மாண்ட காட்டுத்தீயாக பரவி கலிபோர்னியாவின் முக்கிய பகுதிகளை அழித்துள்ளது.

Uber சாரதியான ஜொனாத்தன் தன்னுடைய வேலையை முடித்து விட்டு திரும்பிய போது காட்டுத் தீக்கான ஆரம்ப தீயை மூட்டியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து தப்பியோடிய அவர், மீண்டும் தீயின் அளவை அறிந்து கொள்ள அதே இடத்திற்கு திரும்பி வந்து பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் அவரது டிஜிட்டல் சாதனங்களில் இருந்து கிடைத்த சாட்சிகளில், அவர் ChatGPTஇல் நகரத்தை எரிக்கும் காட்டுத்தீ புகைப்படத்தை உருவாக்கி இருந்தது கிடைத்து இருப்பதாக நீதித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan