எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி - ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் தொடர்ந்து எரிபொருள் விற்பனை குறைந்து வருவதால், பெட்ரோல் நிலையங்களின் மாதாந்திர வருமானம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த வருமானம் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாக எண்ணெய் பிரிப்பாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாள கபில தெரிவித்துள்ளார்.
முன்னர் பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் எண்ணெய் இருப்பு ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும். ஆனால் தற்போது அதற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் அதிக வங்கி வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்படலாம் என இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு மற்றும், அரசாங்கம் அறிமுகப்படுத்திய QR குறியீடு ஆகியவை எண்ணெய் விற்பனையை குறைத்தது.
தற்போது ஒரு காருக்கு மாதம் ஒன்றுக்கு 80 லிட்டர் பெட்ரோலைப் பெறுவதற்கு சுமார் 32,000 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.
இந்நிலைமையும் எண்ணெய் விற்பனை சரிவை பாதித்துள்ளது.
எதிர்காலத்தில் QR குறியீடு தேவைப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam