சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
இலங்கையின் மத்திய அதிவேக வீதித்திட்டத்தின் மிகவும் தாமதமான பிரிவு 1க்கு பொறுப்பான சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
MCC என்ற மேட்ச்லலுர்ஜிக்கல் கோப்ரேஷன் ஒப் சீனா (Metallurgical Corporation of China (Ltd)) நிறுவனத்துடனேயே இந்த ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திறந்த, வெளிப்படையான ஏலச் செயல்முறையின் கீழ் புதிய கேள்விப்பத்திரங்களை கோருமாறு, இலங்கையின் மிகப்பெரிய ஐந்து கட்டுமான நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளன.
MCC உடனான ஒப்பந்தம்
The Lanka Infrastructure Development Consortium (LIDC) PLC, Maga Engineering (Pvt) Ltd, International Construction Consortium (Pvt) Ltd (ICC), KDA Weerasinghe & Co. (KDAW), kw;Wk; NEM Construction மற்றும் NEM Construction என்பனவே அந்த நிறுவனங்களாகும்.

சீன நிறுவனமான MCC உடனான ஒப்பந்தம் மிகவும் விலை உயர்ந்தது என்றும் இந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தநிலையில், பிரிவு 1 இன் மீதமுள்ள பணிகள் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டால் குறிப்பிடத்தக்க செலவுக் குறைப்பு இருக்கும் என்று இந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்க டொலர்கள்
குறிப்பாக சீன நிறுவனத்துடன் செய்துக்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய ஒப்பந்தத்தின் கீழ், ஒரு கிலோமீட்டருக்கு சுமார் 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என விலை குறிக்கப்பட்டுள்ளது.

எனினும் பகுதி 2 க்கு உள்ளூர் நிறுவனங்களால் ஒரு கிலோமீற்றர் ஒன்றுக்கு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே குறிக்கப்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri