டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Climate Change Landslide In Sri Lanka Weather Landslide Cyclone Ditwah
By Rukshy Aug 06, 2026 06:34 AM GMT
Report

புதிய இணைப்பு

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மண் தற்போது நீரால் நிறைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனதீரா தெரிவித்துள்ளார்.

எனவே, லேசான மழையின் போதும் மண்சரிவுகள் மற்றும் பாறைச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் மேலும் கவனமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வானிலை முன்னறிவிப்பின்படி, நாளை (07) மற்றும் நாளை மறுநாள் (08) மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்றும், இந்த நாட்களில் பெய்து வரும் கனமழையால் மண்சரிவு, பாறைச்சரிவுகள் ஏற்பட அதிக அபாயம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலாம் இணைப்பு

நாட்டின் பல மாவட்டங்களுக்கு தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு, ஆகஸ்ட் 06, 2026 அன்று காலை 9:00 மணி முதல் ஆகஸ்ட் 07, 2026 அன்று காலை 9:00 மணி வரை 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலை 2 எச்சரிக்கைகள்

அந்தவகையில் பின்வரும் பகுதிகளுக்கு நிலை 2 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டம் - உடபலத, டோலுவ, மெததும்பர, டெல்தொட்ட, பன்வில, பஸ்பாகே கோரளை, கங்கா இஹல கோரளை மற்றும் உடுதும்பர.

கேகாலை மாவட்டம் - அரநாயக்க, தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்டை.

நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் தலவாக்கலை.

இரத்தினபுரி மாவட்டம் - ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Landslide Warning Issued For Several Districts

பின்வரும் பகுதிகளுக்கும் நிலை 1இன் கீழ் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டம் - கேகாலை.

இரத்தினபுர மாவட்டம் - நிவித்திகல மற்றும் குருவிட்ட

அவசரகால சூழ்நிலை 

மேலும் தொடர் மழை பெய்யும் பகுதிகளில் மண்சரி, பாறைச்சரிவுகள் போன்ற அபாயகரமான சூழ்நிலைகளைக் குறிக்கக்கூடிய மண் மேடுகளில் ஏற்படும் விரிசல்கள் குறித்து கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Landslide Warning Issued For Several Districts

அவசரகால சூழ்நிலை ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயாராக இருக்குமாறும் பொதுமக்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசமடைந்துள்ள பசில் ராஜபக்சவின் உடல்நிலை! நாடு திரும்புவதில் தொடரும் சிக்கல்

மோசமடைந்துள்ள பசில் ராஜபக்சவின் உடல்நிலை! நாடு திரும்புவதில் தொடரும் சிக்கல்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு விளக்கமறியல்..! சிறைச்சாலையில் தற்போதைய நிலைமை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு விளக்கமறியல்..! சிறைச்சாலையில் தற்போதைய நிலைமை

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US