நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனைவரையும் மிகுந்த எச்சரிக்கையின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அபாய எச்சரிக்கை
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை, வலல்லாவிட்ட, பாலிந்த நுவர, புலத்சிங்கள, கண்டி மாவட்டத்தில் கங்கை இஹல கோரள, கேகாலை மாவட்டத்தில் தெரணியகல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, பெல்மடுல்ல, எலபாத, கலவான, நிவித்திகல, அயகம மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 44 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
