நாட்டில் சீரற்ற காலநிலை: பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
அபாய எச்சரிக்கை
நிலை 01 இன் கீழ் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, அகலவத்த, வலல்லாவிட, பாலிந்தநுவர, புலத்சிங்கள ஆகிய பிரதேசங்களுக்கும் கண்டி மாவட்டத்தில் கங்கை கோறளை, கோகாலை மாவட்டத்தில் தெரிணியகல, யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, பெல்மடுல்ல, எலபாத்த, கலவான, நிவித்திகல, அயகம, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குமே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று(16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
