நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை - அடுத்த 24 மணிநேரம் அவதானம்..!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 7 மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) நீடித்துள்ளது.
இந்த எச்சரிக்கை நவம்பர் 11ஆம் திகதி மாலை 4 மணி முதல் நவம்பர் 12ஆம் திகதி மாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,
- நிலை 2 - அம்பர் எச்சரிக்கை (Amber)
கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
- நிலை 1 – மஞ்சள் எச்சரிக்கை (Yellow)
பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்போர் விழிப்புடன் இருக்குமாறும், நிலைமை மோசமடைந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயாராக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், மண் வெடிப்பு, நிலப் பிளவு, மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.