பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை இன்று (16) மாலை 7:30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையின்படி, சில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை-1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
கண்டி மாவட்டம்: உடுநுவர பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
மாத்தளை மாவட்டம்: பல்லேபொல மற்றும் அம்பன்கங்கா கோரலே பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
கேகாலை மாவட்டம்: யட்டியந்தோட்டை மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
குருநேகல மாவட்டம்: ரிதீகம மற்றும் அலவ்வ பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
மொனராகலை மாவட்டம்: மெதகம பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
காலி மாவட்டம்: நெலுவ பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் போன்றவற்றிற்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
