நாட்டின் பல பகுதிகளுக்கு மண் சரிவு எச்சரிச்சை விடுப்பு!
கண்டி, மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், இன்று மாலை மூன்று மாவட்டங்களுக்கும் முதலாம் நிலை மண் சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தில் உடுநுவர, தெல்தோட்டை, கங்காவத்த கோரலே, யட்டிநுவர, தும்பனே, உடுதும்பர, தொலுவ, மெததும்பர, பததும்பர பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனெல்ல மற்றும் அரநாயக்க பிரதேச செயலக பிரிவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இந்த மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் உள்ள அம்பங்கங்கா கோரலே மற்றும் ரத்தோட்டை பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan