நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் கொழும்பு மாவட்டங்கள் மண்சரிவு எச்சரிக்கை உள்ள இடங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
எனவே இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் திடீர் நீரூற்றுக்கள் மற்றும் சுவர்களில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் நிலத்தில் ஏற்படும் வெடிப்பு தொடர்பாக கவனமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நிகழ்வுகள் மண்சரிகளுக்கு காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை,இலங்கையில் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam