நாட்டில் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை, பதுளை, குருநாகல், கேகாலை மற்றும் காலி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த எச்சரிக்கையானது இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்
பதுளை மாவட்டம் மற்றும் காலி மாவட்டம் - நாகொட, எல்பிட்டிய, பத்தேகம, யக்கலமுல்ல ஆகிய இடங்கள்.
அத்துடன் கேகாலை மாவட்டம் - அண்டர்பாஸ், ரம்புக்கன, தெரணியகல, மாவனல்லை, கலிகமுவ.
குருநாகல் மாவட்டம் - ரிதிகம ,மாவத்தகம, அலவ்வா, பொல்கஹவெல, மற்றும் மாத்தளை மாவட்டம் - பல்லேபொல ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.