மண்சரிவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண் சரிவுக்கான அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அத்தியட்சகர் வசந்த சேனாதீர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மண்சரிவு அபாயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை
தொடர்ந்துரையாற்றிய அவர், பதுளை மாட்டத்தில் எல்ல, ஹாலிஎல, பசறை,பதுளை ஆகிய பகுதிகளுக்கும் குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல பிரதேசத்தில்,மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை மற்றும் ரத்தோட்டை பிரதேசங்களுக்கும்,மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புர,பிபில பிரதேசங்களுக்கும் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளதோடு மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய மலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏதும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அல்லது ஏற்படும் அபாயம் நிலவினால் பிரதேசத்தின் கிராம சேவகர்,பிரதேச செயலாளர் அல்லது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதேச செலகத்திற்கு அறிவிக்கவும்.
மேலும் மலை பகுதிகளில் உள்ள வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் அவதானம் தேவை என அத்தியட்சகர் அறிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
