மலையகத்தில் சீரற்ற காலநிலையால் தடை செய்யப்பட்ட போக்குவரத்து (Photos)
மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் பிரதான போக்குவரத்து வீதி கடந்த 14 நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
இந்த மாதம் முதலாம் திகதி பெய்த மழை காரணமாக மஸ்கெலிய – நல்லத்தண்ணீர் பிரதான வீதி மோகினி எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்த பாதை முழுமையாக மண்ணால் நிரம்பியுள்ளது.
போக்குவரத்து தடை
இதன் காரணமாக இந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் இந்த மண்மேட்டின் ஊடாக நடந்து பயணிப்பதும் மிகவும் ஆபத்தானதாக காணப்படுகின்றது.


இதனால் இந்த பகுதியில் வாழும் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15000ற்கும் மேற்பட்ட மக்கள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை தொடர்ந்தும் இந்த பகுதிகளில் மண்சரிவு அபாயமும்
காணப்படுவதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam