கொத்மலையில் மீட்கப்பட்டு வரும் சடலங்கள்.. 25 பேர் மாயம் - தீவிர தேடலில் பொலிஸார்
புதிய இணைப்பு
கொத்மலை - ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் 25 பேரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 50 பேர் குறித்த பகுதியில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
கொத்மலை, ரம்பொட அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் 50 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள ஒருவர், கடந்த 27 ஆம் திகதி இரவு மற்றும் நேற்று (28) அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நுவரெலியா - புடலு ஓயா சாலைகளுக்கு இடையில் ரம்பொட கிராமத்தின் நடுப்பகுதி இடிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது.
தொடர்புகள் அனைத்தும் துண்டிப்பு
நிலச்சரிவு காரணமாக இறந்தவர்களின் உடல்கள் கூட அந்த இடத்தில் உள்ளதாகவும் அவர்களை அகற்றவோ அல்லது காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கவோ முடியாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தொலைபேசி சமிக்ஞைகளும் சேவையில் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
இடத்திற்கான அணுகல் முற்றிலுமாக தடைபட்டுள்ளதுடன் இதுவரை எந்த பேரிடர் நிவாரணக் குழுக்களும் அந்த இடத்தை அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட அப்பகுதியில் சிக்கித் தவிக்கின்ற 50 பேரின் உறவினர்கள், அப்பகுதியில் உள்ள மக்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை அவசரமாக எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri