இலங்கையின் மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI), மூன்று மாவட்டங்களிலுள்ள மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கைகள் நாளை (22ஆம் திகதி) அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கைக்குரிய இடங்கள்
கண்டி மாவட்டம் – யட்டிநுவர (Yatinuwara, கேகாலை மாவட்டம் – மாவனெல்ல (Mawanella) ஆகிய இடங்களுக்கு அம்பர் நிற எச்சரிக்கை (Amber Level) விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ (Ambagamuwa) பகுதிக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை (Yellow Level) விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக குறித்த பகுதிகளில் மண்சரிவு, மலைச்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.