பத்தனை - மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு :- பெண் ஒருவர் பலி(Video)
நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள வீடொன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(03.10.2022) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய ராமசாமி காளியம்மா என்னும் மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வீட்டில் சமயலறையில் தனது மகளுடன் இருந்தவேளையில் திடீரென சுவர் இடிந்து குறித்த பெண் மேல் விழுந்ததனால் உயிரிழந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் குறித்த பெண்ணின் மகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் வைத்தியசாலையில்
சடலம் தற்போது கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த திம்புள்ள பத்தனை பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும்
இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.














16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
