சீனாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி- பலர் மாயம்
சீனாவின்- ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சௌடெல் சூறாவளி காரணமாகப் பெய்த கடும் மழை வீழ்ச்சியினைத் தொடர்ந்து, ஜியாங்சி மாகாணத்தின் சுய்ச்சுவான் கவுண்டிக்கு உட்பட்ட கோபிங் நகரத்தில் இன்று(5.9.2026) அதிகாலை 4.00 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள்
இந்த இயற்கை அசம்பாவிதத்தினால் அப்பகுதியிலுள்ள 12 வீடுகள் கடுமையான சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், நிலச்சரிவுப் பாறைகள் மற்றும் மண்ணுக்குள் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதுடன், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening