வடமராட்சியில் காணி அற்றோருக்கு காணி வழங்கப்பட வேண்டும்! பிரதேச சபை உறுப்பினர் கோரிக்கை
வடமராட்சி கிழக்கு பகுதிகளில் காணி இன்றி வாழும் மக்களுக்கு காணிகளை வழங்க வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் முல்லைத் திவ்வியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம்(7) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, குறித்த பகுதியிலே காணப்படுகின்ற அரச காணிகளை புதிதாக திருமணம் முடித்த தம்பதியினருக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கோரிக்கை
மேலும், பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பற்றைகளாக காணப்படும் காணிகளை மக்கள் துப்பரவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போது அதிகரித்துள்ள வீதி விபத்துக்களில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri