வரவு - செலவுத்திட்டத்தில் மலையகத்துக்கான இரு திட்டங்கள் - வரவேற்கும் இ.தொ.கா
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மலையகத்துக்கான இரண்டு திட்டங்களும் வரவேற்கத்தக்கவை என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 2025ஆம் ஆண்டு சமர்ப்பித்த வரவு - செலவுத் திட்டத்தில் மலையகத்துக்கு இந்திய அரசின் வீடமைப்புத் திட்டத்தைத் தவிர புதிதாக வேறு எந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.
இரண்டாவது வரவு - செலவுத்திட்டம்
ஆனால், ஜனாதிபதியின் 2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தக் கொடுப்பனவாக 200 ரூபாவை அரசு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. மேலும் , நுவரெலியாவில் IT Park உருவாக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு திட்டங்களும் அமுல்படுத்தப்படும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் உயர்வதோடு, மலையகப் பகுதி IT துறையில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புக் காணப்படுகின்றது.
இதன் மூலம் தொழில் துறை வளர்ச்சி அடையும். எனவே, ஜனாதிபதியின் இந்த இரண்டு திட்டங்களும் வரவேற்கத்தக்கவை." என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri