திருகோணமலையில் இந்தியா வசமாகும் பல நூறு ஏக்கர் காணிகள்! ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பெரும் சிக்கல்
திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
35,000 குடும்பங்களை வெளியேற்ற திட்டம்
கொழும்பு மாவட்டத்தினை போன்ற ஒரு பிரதேசத்தினையே இவ்வாறு விற்பனை செய்ய முயற்சித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது திருகோணமலையில் அந்தந்த காணிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பிரதேசத்தில் உள்ள 35,000 குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
