ஜப்பானுடன் கண்ணிவெடி ஒப்பந்தத்தில் கைச்சாத்து
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றி 4462 பேரை மீள்குடியேற்றி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாட்டுக்காக கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான மக் நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை கண்ணிவெடி இல்லாத நிலையை அடைவதற்கு ஜப்பான் அரசாங்கத்தின் நீண்டகால ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக இந்த ஒப்பந்தமும் அமைந்துள்ளது.
இதுவரை, ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவுடன், MAG (மக்) நிறுவனமானது வடக்கு கிழக்கில் 2,928,832 கன மீற்றர் நிலத்தை விடுவித்துள்ளதுடன் போரின் எச்சங்களான 6,918 பாதுகாப்பாக அகற்றி அழித்துள்ளது என அந் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்தார்.
புதிய திட்டம்
இதனால் 45,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர் தெரிவித்த அவர் இந்த புதிய திட்டம் மேலும் 155,936 கனமீற்றர் நிலத்தை விடுவிக்கவும், மேலும் 4,462 பேர் மீள்குடியேற்றம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் கண்ணிவெடி அகற்றுதல் முக்கியமானது என்ற அடிப்படையில் 2002 முதல் 101,182,769 கனமீற்றர் நிலத்தை மக் நிறுவனம் கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக விடுவித்துள்ளது.
கைச்சாத்திடப்பட்ட நிகழ்வில் ஜப்பான் தூதரகத்தின் அதிகாரி கமோசிடா நோக்கி கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சிங்கி கார்வெல் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
