மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களுக்கு நிலத்தை மீட்டுக்கொடுப்பதற்கான முயற்சி தொடர்ச்சியாக முன்னெடுப்பு

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka SL Protest Protest
By Kumar Sep 24, 2026 07:20 AM GMT
Report

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களுக்கு அந்த நிலத்தை மீட்டுக்கொடுப்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். 

அதை எந்தவொரு வகையிலும் நாங்கள் கைவிடப் போவது கிடையாது, இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலே நாங்கள் அந்த மேய்ச்சல் தரைக்கான நிலத்தை விடுவித்து வழங்குவதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் முன்னெடுக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

மேய்ச்சல் தரைக்கான போராட்டம்

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்கான போராட்டம் இப்போது தீவிரமடைந்திருப்பதை நாங்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து அவர்கள் தங்கள் மேய்ச்சல் தரைக்காக போராடிக்கொண்டு வருகின்றார்கள்.

கிட்டத்தட்ட 1000 நாட்களைத் தாண்டி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த வேளையிலே, 2026ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளையில், இந்த மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பான பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற தங்களது நிலத்திற்கான போராட்டத்திற்கான முற்றுப்புள்ளி வைக்கின்ற விதமாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஒரு தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் 1570 ஏக்கர் மகாவலிக்குச் சொந்தமாக இருக்கின்ற அந்த நிலத்தினை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பணிப்புரை வழங்கியிருந்தார். அந்த அடிப்படையிலே, தொடர்ச்சியாக அந்த நிலத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம்.

அதன் பின்னர் இப்போது புதிதாக ஒரு பிரச்சினை ஒன்று எழுந்திருக்கின்றது. இந்த மேய்ச்சல் தரைக்குள்ளே, அந்த பண்ணையாளர்கள் கோருகின்ற அந்த நிலத்துக்குள்ளே வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து, தாங்கள் தோட்டத் தொழிலை மேற்கொள்வதற்காக அல்லது தோட்டத்தை நடத்துவதற்காக அவர்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்ற நடவடிக்கை தொடர்பாகவும், அந்த மேய்ச்சல் தரை காணிக்குள்ளே அவர்கள் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சில முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் சில விடயங்கள் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

குழப்பமான நடவடிக்கை

உங்களுக்குத் தெரியும், இந்த மேய்ச்சல் தரை விவகாரம் நாங்கள் பேசத் தொடங்கியதில் இருந்து, பல இனவாத ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

உங்களுக்குத் தெரியும், முன்னாள் ஆளுநர் மற்றும் அவரோடு சேர்ந்ததான மொட்டுக்கட்சியினைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைப்பாளர்களும் என ஒருசிலர் ஒன்றிணைந்து, நாங்கள் விடுவிக்கப்படவிருக்கின்ற அந்தப் பிரதேசத்துக்குள்ளே சில குழப்பமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ஆகவே, தெளிவான ஒரு சிந்தனையிலே நாங்கள் இருக்கின்றோம். அந்த மேய்ச்சல் தரையை, மாடு வளர்க்கின்ற அந்தப் பண்ணையாளர்களுக்கு, பால் பண்ணையாளர்களுக்கு அந்த நிலத்தை மீட்டுக்கொடுப்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம். அதை எந்தவொரு வகையிலும் நாங்கள் கைவிடப் போவது கிடையாது. இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலே நாங்கள் அந்த மேய்ச்சல் தரைக்கான நிலத்தை விடுவித்து வழங்குவதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் முன்னெடுக்கின்றோம்.

இனி வருகின்ற வாரம் அதன் முன்னேற்றம் தொடர்பான விடயத்தினை மேல்மட்டத்தில் இருக்கின்ற நடவடிக்கை தொடர்பான விடயங்களை நாடாளுமன்றத்திலே, எங்களது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையிலே முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இடம்பெற இருக்கின்றது.

மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களுக்கு நிலத்தை மீட்டுக்கொடுப்பதற்கான முயற்சி தொடர்ச்சியாக முன்னெடுப்பு | Land To Farmers Of Mayilathamadu And Madhavanai

ஆகவே, இதை வெகுவிரைவாக விடுவிப்பு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். எங்களது மேன்மை தங்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுவித்த அந்தப் பணிப்புரையின் அடிப்படையிலே அதை நாங்கள் மீட்டுத்தர தயாராக இருக்கின்றோம்.

அதனைப் போன்று, இந்த காணிகளுக்குள்ளே அத்துமீறி செயல்படுபவர்கள் தொடர்பாகவும் பொலிஸாருக்கு நாங்கள் பணிப்புரை வழங்கி இருக்கின்றோம். அதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், மேலதிகமாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகரின் ஊடாகவும் அந்த பொலிஸ் நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

விசாரணைகள் முன்னெடுப்பு

மகாவலி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் அந்த விசாரணைகளை பொலிஸாருடன் இணைந்து தற்போது முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள். அவர்களை இந்த இடத்தில் வந்து, பண்ணையினைக் குழப்புகின்ற, மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகள் முன்னெடுக்கின்றார்கள். அவர்களுக்கும் இங்கே காணிகள் இருக்கின்றதா என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கின்றோம்.

யாராக இருந்தாலும் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலே, தங்களது தொழில்களை, தங்களது வருமானம் ஈட்டுகின்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடத்தான் வேண்டும். அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் நாங்கள் வழங்குவோம். அதனைப் போன்று, இதனை பின்னணியில் இருந்து குழப்புகின்றவர்களுக்கு எதிராகவும் நாங்கள் எங்களது அவதானிப்புகளைச் செலுத்திக் கொண்டிருக்கின்றோம். உங்களுக்குத் தெரியும், அது கிட்டத்தட்ட 3000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரதேசம்.

அதிலே 1500 ஏக்கர் மகாவலிக்குச் சொந்தமான இடம் இருக்கின்றது. மேலதிக பகுதிகள் வனத் திணைக்களத்துக்குச் சொந்தமாக இருக்கின்றது. அனைத்துப் பகுதிகளின் ஊடாகவும் வழிகள் இருக்கின்றன அந்த இடத்தைச் சென்றடைவதற்கு. எவ்வழியின் ஊடாக அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் என்பது தொடர்பான தகவலை நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

அதனைப் போன்று பொலிஸாருக்கும், பொலிஸ் மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் நாங்கள் அறிவுறுத்தல் வழங்கி இருக்கின்றோம். அதனைப் போன்று மகாவலி திணைக்களத்துக்கும் இவர்கள் தொடர்பாகத் தகவல்களைத் திரட்டி, அவர்களுக்கு சம்பந்தமான காணிகள் தொடர்பான விடயங்கள் இருக்கின்றதா என்பதையும் தேடிப் பார்க்கச் சொல்லி இருக்கின்றோம். நீங்கள் குறிப்பிட்டது போன்று நீதிமன்ற வழக்கு முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கிலே சில விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகவே, அந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளுமாறு நாங்கள் பணித்திருக்கின்றோம். மகாவலி திணைக்களத்தின் ஊடாகவும், பொலிஸார் ஊடாகவும் அந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். பண்ணையாளர்கள் அன்றைய தினமும் குறிப்பிட்டிருந்தார்கள், தங்களது முறைப்பாடுகளை பொலிஸார் கருத்தில் கொள்வதில்லை என்று. கரடியானாறு பொலிஸ{க்குத் தான் இது சம்பந்தப்பட்டிருக்கின்றது.

ஆகவே, அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் பணிப்புரை வழங்கி இருக்கின்றோம், அவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் வரும்போது அதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அத்துமீறி செயல்படுபவர்களுக்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர்களுக்குப் பணித்திருக்கின்றோம்.

ஆகவே, இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான விடயங்களும் இதில் இருப்பதனால், அதனையும் கருத்தில் கொண்டு நாங்கள் செயல்பட வேண்டி இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கைக்கு அழைத்து வரப்படுவாரா சாரா..! கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து கேள்வி

இலங்கைக்கு அழைத்து வரப்படுவாரா சாரா..! கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து கேள்வி

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி அம்பலம் - காட்டிக் கொடுத்தார் கோட்டாபய

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி அம்பலம் - காட்டிக் கொடுத்தார் கோட்டாபய

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US