மலையக மக்களுக்கு காணி உரிமை: இந்திய சட்டத்தரணி வலியுறுத்து
இலங்கை மலையகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இந்நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவை சேர்ந்த சட்டத்தரணி சிவஞானசம்பந்தம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“மலையக மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக இருக்கின்றபோதும், அவர்களின் வழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் அரசாங்கங்கள் எதனையும் செய்வதில்லை.
கோரிக்கை
இதனால் அவர்கள் நாளந்த வருமானத்தை பெறுவதில் கூட பெரும் அசௌகரியங்களை சந்திக்க நேரிடுகின்றது.
இந்த நிலையை தற்போதைய அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை இந்திய தரப்பினருக்கும் முன்வைக்க இருக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri