முன்னாள் ஆளுநர் லக்ஷ்மண் யாப்பாவுக்கு எதிராக வழக்கு
முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஆளுநருமான லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாம் பதவிக்கால ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியில் பத்திரிகைகளில் ஒரு வாழ்த்துச் செய்தி விளம்பரமாக பிரசுரிக்கப்பட்டது.
வழக்கு
அதன் மூலம் அரசாங்கத்துக்கு 17 இலட்சம் ரூபா இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அன்றைய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா மற்றும் முதலீட்டுச் சபையின் அன்றைய பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் சாட்சிகளாக பதினைந்து பேர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வழக்கு ஆவணங்களாக 21 தடயப் பொருட்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
