இன அழிப்பிற்கு நீதி வேண்டும்: மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியம்
முள்ளிவாய்க்கால் கஞ்சியினை ஒரு அடையாளமாக மாற்றி இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள், அளிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன அழிப்பு வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று(16) மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன அழிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், 16 ஆண்டுகள் கடந்து இன அழிப்புக்கு நீதி வேண்டிய மக்களாக இன்றைய நாளில் மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு தற்போது நிறைவு கூறப்பட்டு கொண்டிருக்கின்றது.
நாங்கள் ஒரு இன அழிப்பை சந்தித்தவர்கள் இன அழிப்பில் இருந்து எஞ்சிய இனமாக நாங்கள் இருக்கின்றோம். ஆகவே அளிக்கப்பட்ட இனத்தினுடைய பிரதிநிதிகளாக இருந்து இந்த அடையாளத்தை நினைவு கூறுவதோடு நாங்கள் இன அழிப்புக்கான நீதியினை கேட்டு நிற்கின்றோம்.
நீதி
இஸ்ரேலியருடைய வரலாற்றில் புளிப்பற்ற அப்பமும் கசப்பு கீரையும் அவர்களுடைய அடையாளமாக மாறி அடையாளத்தின் மூலமாக அவர்கள் நீதி கேட்டு மீண்டும் ஒரு சமூகமாக மீண்டெழுந்தார்களோ நாங்களும் இந்த கஞ்சியினை ஒரு அடையாளமாக மாற்றி பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி இந்த நினைவேந்தலை மேற்கொண்டு இந்த அடையாளத்தின் ஊடாக நீதி கேட்கின்றோம்.
இதனை நாங்கள் இன்று முன்னெடுத்து அழிக்கப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதோடு நாங்கள் அவர்களுக்கு நீதி வேண்டி நிற்பதோடும் இந்த இன அழிப்பு மீள இடம்பெறாமல் இருப்பதனை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் ஒன்று திரண்டு இந்த நினைவேந்தலை மேற்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




