நடமாடும் சேவையால் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மக்கள்! செல்வம் அடைக்கலநாதன் (Photos)

service People Vavuniya Land
By Independent Writer Feb 27, 2022 06:07 PM GMT
Report

வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணிப்பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவையால் மக்கள் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அதனை தீர்ப்பதற்கு அமைச்சரவை நேரடியாக கையாளும் வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (27) இடம்பெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவையில் கலந்து கொண்டு விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நடமாடும் சேவை என்பது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் எமது மக்கள் இந்த சேவையிலே நம்பிக்கை அற்றுப்போய் இருக்கின்றார்கள். தொடர்ச்சியாக அந்தந்த பகுதிகளின் பிரதேச செயலாளர்கள் மக்களுக்கு சொல்லும் பதிலையே இப்போதும் சொல்லப்போகின்றார்கள்.

எனவே மக்கள் இதில் தீர்வைப்பெற்று கொள்ள முடியும் என்பதில் வாய்ப்பே இல்லை. பல வருடமாக தீராது உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற ஆர்வத்தோடு மக்கள் வந்துள்ள நிலையில், இந்த நடமாடும் சேவையினுடைய செயற்பாடு நல்லதாக இருக்கவில்லை என்பது எனது கருத்து.

இந்த நடமாடும் சேவைகள் தொடர்ச்சியாக ஒரே தவறையே விட்டுக்கொண்டிருக்கின்றது. அதனை நிறுத்துவதென்றால் அமைச்சரவை ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்.

இந்த காணி பிரச்சனையை நேரடியாக கையாளுகின்ற ஒரு வழிமுறையை அவர்கள் செயற்படுத்த வேண்டும். அத்துடன் வடமாகாண காணி ஆணையாளருக்கு இந்த காணி பிரச்சினையை தீர்ப்பதற்கான காணிக்கச் சேரியை நடாத்துவதற்கு தாங்கள் அதிகாரம் வழங்கியிருப்பதாக சொல்லியிருக்கின்றார்கள்.

அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. அப்படி அதிகாரம் வழங்கியிருந்தால் வடமாகாண காணி ஆணையாளர் எமது மக்களின் பிரச்சினைகளை உண்மையில் தீர்த்திருக்க வேண்டும்.

காணிக்கச்சேரியை நடாத்தியிருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. குறிப்பாக வடகிழக்கில் தான் காணிபிரச்சினைகள் தீர்க்காமல் இருப்பதான குற்றச்சாட்டை அமைச்சர் முன்வைத்துள்ளார்.

உண்மையில் அது எமக்கு ஒரு தலைகுனிவு தான். இந்த நடமாடும் சேவை என்பது ஏமாற்றுகின்ற விடயமாக தான் இருக்கிறது. காணி பிரச்சினைகளை முழுமையாக காணி அமைச்சே கையாள வேண்டும்.

ஆகவே பிரதேச செயலகங்களில் மக்கள் சென்று களைப்படைந்த நிலையில் மீண்டும் அதே அதிகாரிகளை எமது மக்கள் சந்தித்து பேசுவதென்பது தீர்வாகாது.

நாம் இது தொடர்பில் அமைச்சரிடமும் பேசியிருக்கிறோம். அத்துடன் முல்லைத்தீவில் மகாவலி வலயம் என்றவகையில் காணிகளை அபகரிக்கும் சூழல் காணப்படுகின்றது.

அந்த காணிகளை பெறுவதற்கான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் கூட இந்த நடமாடும் சேவைக்கு வந்திருக்கின்றார்கள் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.


Gallery
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US