வடக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுகிறதா..! அரசாங்க தரப்பின் அறிவிப்பு
வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அது தொடர்பில் உள்ளக கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அத்துடன் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கொண்டு செல்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அப்பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.
இதன் உண்மைத்தன்மை குறித்து அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் வினவிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



