வடக்கிற்கு காணி அல்லது பொலிஸ் அதிகாரம்..! வெளியாகியுள்ள தகவல்
வட மாகாணசபைக்கு காணி அல்லது பொலிஸ் அதிகாரத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக மாகாணசபை முதலமைச்சர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் அடங்கிய அறிக்கைகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
13ஆவது திருத்தம் மற்றும் வடமாகாணசபை தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவது குறித்து வினவிய போது, எந்தப் பிரச்சினையும் இல்லை என அரசாங்கத்தின் உயர்மட்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியப் பிரதமரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும், அதில் அரசாங்கத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
