கொழும்பில் காணிகள் குறித்து எடுத்துள்ள நடவடிக்கை! மக்களை விரட்டும் முயற்சி தொடர்பில் அம்பலமான விடயம்
ஜனாதிபதிக்கு அதிக வாக்குகளை வழங்கிய கொழும்பு மக்களை அங்கிருந்து விரட்டுவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன் சாதாரண ஏழை மக்களின் காணிகளை பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை பயன்படுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் நிறைவேற்று சபையில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிசைவாசிகள், குறைந்த வருமானம் பெறுவோரின் வீடுகள் மற்றும் நடுத்தர வர்க்க வீட்டுத்திட்டங்கள் அனைத்தையும் அகற்றியுள்ளதாகவும், அவற்றை அரச தனியார் பங்காளித்துவத்தின் கீழ் புதிய திட்டங்களுக்கு வழங்குமாறு அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




