யாழில் சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் காணி அபகரிப்பு: மக்களின் கோரிக்கை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் 600 ஏக்கர் காணிகளை சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் அபகரிக்கும் முயற்சியை கைவிடுமாறு மணக்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணக்காட்டு பகுதியில் கற்கோவளத்திற்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் 300 ஏக்கர் காணியும், மணக்காட்டுக்கும் பொற்பதி கிராமத்துக்கும் இடைப்பகுதியில் 300 ஏக்கர் காணியிலும் சுற்றுலா தேவைகளுக்காக அபகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற உள்ளன.
இதனை உடனடியாக கைவிடுமாறு மணக்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணக்காடு கிராம மட்ட அமைப்புகள் இன்றையதினம் (25.10.2025) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
பொறுப்பு நடவடிக்கை
மணக்காடு கிராமத்திலுள்ள மக்கள் பலருக்கு குடியிருக்க காணியில்லாத நிலையில், தனியார்களுக்கு இவ்வாறு காணிகளை வழங்கும் முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதனை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்புகள், உரிய கவனமெடுத்து குறித்த 600 ஏக்கர் காணிகள் பொறுப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri