வனஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சியில் காணி அபகரிப்பு முயற்சி
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் காணிகள் அபகரிக்கும் முயற்சி ஏற்பாடாகியுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அம்பன் கிராம சேவகரால் அம்பன் மக்களைக் காலை 9:30 மணிக்கு தமது காணிகளுக்கான உறுதிகளுடன் சமுகமளிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிராமசேவகர் அறிவிக்கையில்,
எல்லைப் பரப்பிற்குள் வருகின்ற மக்களின் காணிகளை வனஜீவராசி திணைக்களம் பார்வையிட்டு (காணி, அதற்கான ஆவணங்கள்) என்பவற்றைப் பார்வையிட்டு மக்களின் காணிகளைத் தவிர்த்து தமது எல்லையினை வகுப்பதற்காக வனஜீவராசி திணைக்களத்தினர் நாளை வருகை தரவுள்ளனர்.
எனவே வைத்தியசாலை முன்பக்கம் தொடக்கம் தங்கராசா என்பவரது வீடு வரை உள்ள வயல் காணி உரிமையாளர்கள் காலை 9.30 மணிக்கு ஆவணங்களுடன் தயார் நிலையில் நிற்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்'' இவ்வாறு அறிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 25/03 2022 அன்று ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பிற்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பில் தமிழ் மக்களின் எந்தவிதமான
காணிகளையும் அபகரிக்க மாட்டோம் என ஜனாதிபதியால் உறுதியளித்ததாகத் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரனால்
சொல்லப்பட்டுள்ள நிலையில், நாளை இவ் அபகரிப்பு இடம்பெறுவது மக்கள் மத்தியில்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
