அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை பொதுமக்களால்
தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த மாவீரர் துயிலும் இல்ல காணியை
தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுவீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி இன்று (18.01.2024) இடம்பெறவிருந்த நிலையில் பொதுமக்களால் குறித்த அளவீட்டு பணிகள் தடுத்து
நிறுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நில அளவை திணைக்கள அதிகாரிகள் நில அளவீட்டு பணிக்காக துயிலும் இல்ல காணிக்கு சென்ற போது அங்கு கூடிய மக்கள் இந்த இடத்தில் நாம் எமது உறவுகளை புதைத்துள்ளோம், இந்த காணியை அளவிட அனுமதிக்க மாட்டோம் என கூறியதையடுத்து அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்ப்பில் கலந்துகொண்டவர்கள்
இதேவேளை, குறித்த இடத்தில் மக்களுடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri