பொதுமக்களின் எதிர்ப்பினையடுத்து கைவிடப்பட்ட காணி சுவீகரிப்பு
சுழிபுரம் பகுதியில், மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பானது கைவிடப்பட்டுள்ளது.
கடற்படை முகாமிற்காக முன்னெடுக்கபடவிருந்த குறித்த காணி சுவீகரிப்பாளது அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பினை தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது.
சுழிபுரம் பகுதியில் உள்ள 4 பரப்பு தனியார் காணியினை நில அளவை திணைக்களம் கடற்படையினரின் சுவீகரிகப்பிற்காக காட்டுபுலத்திற்கு வருகை தந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பொதுமக்களின் எதிர்ப்பு
இந்நிலையில் தாம் திரும்பி செல்வது தொடர்பில் மேலதிகாரிக்கு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலதிகாரியுடன் தொடர்பு கொண்டு பொதுமக்களின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேலதிகாரியினால் மீள வரும்படியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
அகன்று சென்ற அதிகாரிகள்
தொடர்ந்து சட்டத்தரணி சுகாஷினால் உரிமையாளரின் எதிர்ப்பு கடிதமும் பாரதீனபடுத்தப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்தை விட்டு நில அளவை திணைக்களம் அகன்று சென்றுள்ளது.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் தீபன்



“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
