இதைச் செய்தால் மக்கள் எம்மையும் விரட்டியடிப்பார்கள் – அமைச்சர் லால்காந்த
பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியாவிட்டால் மக்கள் தம்மை விரட்டியடிப்பார்கள் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதுடன் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு பதவியை விட்டு விலக நேரிட்டது என லால்காந்த தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடன் கொடுக்க எவரும் முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் நாமும் வீட்டுக்கு செல்ல நேரிடும் எனவும் மக்கள் தம்மை விரட்டியடிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam