ஆடம்பர இல்லம் குறித்த விமர்சனங்களுக்கு அமைச்சர் லால்காந்தவின் விளக்கம்
அண்மையில் அமைச்சர் கே.டி. லால்காந்தவின் ஆடம்பர இல்லாம் அதில் காணப்படும் பொருட்கள் தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் லால்காந்த இந்த விமர்சனங்கள் தொடர்பில் இணைய ஊடகமொன்றுடனான நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
அமைச்சர் லால்காந்த முழு நேர அரசியலில் ஈடுபடும் ஓருவர் எனவும் அவரது மனைவியின் ஊதியத்தைக் கொண்டு எவ்வாறு அதி சொகுசு வீடு நிர்மானிக்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் இந்த வீடு விவகாரம் குறித்த பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த விமர்சனங்கள் தொடர்பில் அமைச்சர் லால்காந்த விளக்கம் அளித்துள்ளார்.
தமது பூர்வீக சொத்துக்களை விற்று இந்த வீடு அமைந்துள்ள காணியை கொள்வனவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டை நிர்மானிப்பதற்கு கட்சி நிதியோ அல்லது அரச வரிப் பணமோ பயன்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாற்பது ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் தமது மிகப் பெரிய சொத்து சமூக மூலதனம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேவை ஏற்பட்டால் தொலைபேசி அழைப்பு மூலம் ஐந்து கோடி ரூபா பணம் திரட்டக்கூடிய செல்வாக்கு தமக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
100 பேரிடம் தலா ஐந்து லட்சம் ரூபா என்ற அடிப்படையில் பணம் பெற்றுக்கொள்ளப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகத்தில் விமர்சிக்கப்பட்ட பியானோ கடந்த 15 ஆண்டுகளாக வீட்டில் இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் ஓர் அமைச்சர் எனவும் அதற்கு ஏற்றவாறு தனது நடை, உடை வாழ்க்கை முறைமை என்பனவற்றை மாற்றிக் கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சமவுடமை என்பது அனைவருக்கும் நன்றாக வாழ இடமளிப்பதேயாகும் எனவும் மாறாக வறுமையை பகிர்ந்து கொள்வது கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தனது மனைவியின் வருமானத்தில் வாழ்ந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
தமது வீட்டில் காணப்படும் பொருட்களை பார்த்து பொறாமைபடக் கூடாது என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 10 மணி நேரம் முன்
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam