முக்கிய அமைச்சர்களை நீக்க டொனால்ட் ட்ரம்ப் திட்டம்! அமைச்சரவையில் அதிரடி மாற்றம்
ஈரான் நாட்டுடனான போர் சூழல் மற்றும் அதன் விளைவாக அமெரிக்காவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, சட்டமா அதிபர் பாம் பாண்டி அண்மையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையக்கூடும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் போர் எதிரொலி
ஐந்து வாரங்களாகத் தொடர்ந்து வரும் இந்தப் போரினால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதும், இது நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினருக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமுமே இந்த மாற்றங்களுக்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றப் பட்டியலில் தேசிய புலனாய்வுத் துறை இயக்குநர் துளசி கப்பார்ட் மற்றும் வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லட்னிக் ஆகியோரது பெயர்கள் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
துளசி கப்பார்ட் மீது ட்ரம்ப் அதிருப்தியில் இருப்பதாகவும், அவருக்குப் பதிலாகப் புதிய நபர்களை நியமிப்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் திட்டம்
அதேசமயம், ஹோவர்ட் லட்னிக் மீது மறைந்த குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு குறித்த முறைப்பாடுகள் மீண்டும் எழுந்துள்ளதால் அவரை நீக்க வேண்டும் என ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டேவிஸ் இங்கிள் இந்தக் கருத்துக்களை மறுத்துள்ளார், அமைச்சரவை உறுப்பினர்கள் மீது ஜனாதிபதி முழு நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam