தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஒப்புக்கொண்ட அமைச்சர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என அமைச்சர் கே.டி. லால் காந்த ஒப்புக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் அவர் இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில் சம்பளம் உயர்த்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையில் அடிப்படை சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டாலும் வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ற வகையில் இன்னமும் சம்பளம் உயர்த்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில் சம்பளம் அதிகரிக்க வேண்டும் எனவும் அதுவும் அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று இயங்கி வருவதால் அதன் அடிப்படையிலேயே இந்த சம்பள விவகாரங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக தொழிற்சங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் தங்களது கருத்துக்களை முன்வைக்க வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதன் பின்னர் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து சம்பள உயர்வு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என அமைச்சர் லால்காந்த சுட்டிக் காட்டியுள்ளார்.