லலித் - குகன் கடத்தப்பட்ட சம்பவம்! கோட்டாபய மீது பகிரங்க குற்றச்சாட்டு
லலித் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணை வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.
லலித் குமார் வீரராஜுவின் சகோதரிகள் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து தங்களது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.
முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜகோடா, லலித் குமார் வீரராஜுவின் தந்தை ஆறுமுகம் மற்றும் இரண்டு சகோதரிகளும் இன்று கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளனர்.
வழக்கு தொடர்பான விசாரணை
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆறுமுகம் வீரராஜா,
“யாழ்ப்பாணம் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் பல சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிட்டிருந்தாலும், அவர் இதுவரை முன்னிலையாகவில்லை.
இந்த அரசாங்கத்தால் நீதி வழங்கப்படும் என்று தானும் அவரது குடும்பத்தினர் நம்பிக்கை கொண்டுள்னோம்.” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



