லொஹான் ரத்வத்த என் வளர்ப்பு பிள்ளை! லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு
லொஹான் ரத்வத்தவின் சிறுவயதில் இருந்து அவரை நான் பார்த்து, வளர்த்தேன். அவர் எனது வளர்ப்பு பிள்ளை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
லொஹான் ரத்வத்தவின் இழப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,லொஹான் ரத்வத்தவின் மரணம் குறித்து தாம் மிகவும் வருத்தமடைவதாக தெரிவித்துள்ளார்.
இரங்கல்
அத்துடன்,லொஹான் ரத்வத்தவின் செயற்பாடுகளை அவருடைய சிறு வயது முதல் தாம் பார்த்துள்ளதாகவும் அவர் தனக்கு ஒரு வளர்ப்பு பிள்ளை போன்றவர் எனவும் கூறியுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தனது 57ஆவது வயதில் காலமானார்.
தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த 15 ஆம் திகதி காலமானார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.





டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
